———- Forwarded message ———
From: lenin g<glenin007@gmail.com>
Date: Sun, Dec 25, 2016 at 5:27 PM
Subject: இந்தியாவின் அடுத்த தலைமுறை நாயகர்கள்
To: dyfi tn <ilaignarmuzhakkam@gmail.com>
இந்தியாவின் அடுத்த தலைமுறை நாயகர்கள்
கிரிக்கெட் விளையாட்டு தற்போது 20வது ஓவர் போட்டி அளவிற்கு சுருங்கி விட்டது. இந்தப் போட்டியைக் காணத்தான் தற்போது ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஏன் என்றால் 5 அல்லது 6 மணி நேரத்திலேயே போட்டியின் முடிவை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு, மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் பந்து மழை பொழிகிறது இன்னொரு காரணம் என்று, சொன்னால் அது மிகையாகாது.
இப்போது டெஸ்ட் போட்டி என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து விட்டது. ஏன் என்றால் ஒரு போட்டியே 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. எதிராளி எந்த வேகத்தில் பந்தை போட்டாலும் அதை 10 மீட்டர் கூட பந்தை நகர விடாமல் தடுப்பாட்டம் ஆடுவதில் ராகுல் டிராவிட் நம்பர் ஒன். இவரைப் போலேவே பலரும் விளையாடுவார்கள். இப்படி விளையாடினால் பேட் செய்யும் நபருக்கு மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கும். இதற்கு காரணம் களத்தில் ‘நான் இருக்கிறேன்’ என்பது தான். எப்போதாவது தான் பந்து வானத்தை நோக்கி பறக்கும். இந்த நிலை தோனிக்கு முந்தைய கிரிக்கெட் ஆட்டம் வரை தான் இருந்தது. அதன் பிறகு டெஸ்ட்போட்டிகளிலும் ஒரு நாள் போட்டிபோல வீரர்கள் ஆடத்துவங்கினர். இதற்கு காரணம் 20வது ஓவர் போட்டி விளையாடியதுதான்.
இப்போது இருக்கும் இளம் வீரர்களுக்கோ பொறுமை என்பதே கிடையாது. டெஸ்ட்போட்டியையும் ஒரு நாள் போட்டி போல் விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கு சான்று சென்னையில் இந்தியா இங்கிலாந்துக்கிடையே நடைபெற்ற போட்டி. இதில் இளம் வீரர் கருண் நாயர் ஒரு நாளில் 232 ரன் எடுத்ததுதான் காரணம்.
வெஸ்ட் இண்டிஸ் நாட்டைச் சேர்ந்த பிரைன்லாரா டெஸ்ட் போட்டியில் 400 ரன்களை கடந்து அதிகம் அடித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். ஆனால் இளம் வீரர்களின் வேகத்தைப் பார்த்தால் இந்த சாதனையை முறியடிப்பதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 5வது டெஸ்ட் போட்டியில் புதுமுகம்; அதுவும் குழந்தை முகம் தான் களம் கண்ட மூன்றாவது இன்னிங்சிலேயே தனது முதல் சதத்தையே முச்சதமாக மாற்றினார் கருண் நாயர். இந்த சாதனையை இந்திய வீரர் ஒருவரைத் தவிர மற்ற நட்சத்திர வீரர்கள் யாரும் செய்தது கிடையாது. அவர் தான் சேவக். இதே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 319 ரன் எடுத்த முதல் வீரர். இரண்டாவது கருண் நாயர்.
கவாஸ்கர், கபில் தேவ், ராகுல் திராவிட், சௌரவ் கங்குலி, விவிஎஸ் லட்சுமணன், எம்.எஸ்.தோனி இப்படியான இந்திய ஜாம்பவான்கள் கூட 300 ரன்னை தொடக் கூட முடியவில்லை.
ஏன், கிரிக்கெட்டின் பிதாமகன் என்று சொல்லும் சச்சினால் கூட இந்த சாதனை பட்டியலில் இடம் பிடிக்க முடியவில்லை. இதனால் தான் உலகமே கருண் நாயரைப் பற்றி பேசுகிறது. அவர் 300 ரன் அடித்த உடன் இங்கிலாந்து வீரர்கள் கூட அவருக்கு கை கொடுத்து கருணை கவுரவித்தனர்.
தான் கலந்து கொண்ட முதல் போட்டியில் 4 ரன் தான் எடுத்தார் கருண் நாயர். ஆனால் மனம் தளரவில்லை. மூன்றாவது போட்டியில் 5வது வீரராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து வீரர்களின் பந்துகளை மெதுவாக பதம் பார்க்க ஆரம்பித்தார். 185 பந்துகளில் தன்முதல் சதத்தை பதிவு செய்தார். புதிதாக வானத்தைப் பார்க்கும் ரோஜாவைப் போல் அவரது முகம் மலர்கிறது. ஆனால் , அவரது மனமோ இது போதாது எனச் சொல்கிறது. ரசிகர்களின் கர ஒலி எப்போதுமே இருக்க வேண்டும் என நினைத்தாரோ என்னவோ, மீண்டும் தன் ஆட்டத்தினால் 200 ரன்னை தொட்டார். இந்த சாதனையையும் அவரது மனம் ஏற்க மறுத்து ஏதாவது பெரிதாக சாதிக்க வேண்டும் என நினைக்கிறது. இங்கிலாந்து வீரர்களை நோக்கி ‘இப்போது பாருங்கள் என்னுடைய ஆட்டத்தை’ எனக் கூறி 85 பந்துகளில் அடுத்த சதத்தை அடித்து தனது முதல் சதத்தையே முச்சதமாக மாற்றி சாதனை படைத்தார் கருண் நாயர். அடுத்த நொடியே இவரின் பெயர் உலகம் முழுவதும் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.
“12 ஆண்டுகளாக நான் தனிமையில் இருந்தேன். இப்போதாவது என் தனிமையைப் போக்கி என்னுடன் சேர்ந்தீர்களே”என விவேந்திர சேவக் தனது டுவிட்டரில் கருண்நாயருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
கருண் நாயர் முதல் சதத்தையே முச்சதமாக மாற்றியவர்கள் வரிசையில் 3வது இடத்தில் உள்ளார். 1957-58ல் இங்ஸ்டலில் நடைபெற்ற, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேரி சோபர்ஸ் 365 ரன்களும், 1964ல் ஓல்ட் பிராஃபோர்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாப் சிம்ப்ஸன் 311 ரன்களும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை மாதம் கேரளாவில் படகு விபத்து ஒன்றில் சிக்கிக் கொண்டார் கருண். இந்த விபத்தில் தான் உயிர் பிழைத்ததே ஆச்சரியம் என்று சொன்னார் கருண் நாயர். அவர் விழுந்த இடத்திலிருந்த தண்ணீருக்கு தெரிந்திருக்கிறது. இவன் உலகத்தையே தன் பக்கம் திரும்ப வைக்கப் போகிறான் என்று நினைத்ததோ என்னவோ!. அதனால் தான் கருணை கொள்ள மனம் இல்லாமல் கருணைகாட்டியுள்ளது. கருண் நாயரோடு மட்டும் சாதனை நின்றுவிடவில்லை. இங்கிலாந்து உடனான போட்டியில் இந்திய வீரர்களே பல சாதனையை படைத்துள்ளனர்.
டிசம்பர் மாதம் வர்தாவின் பிடியில் சென்னை சிக்கியது. அதே மாதத்தில் கருண் நாயர், அஸ்வின், ஜடேஜா, ராகுல் பிடியில் இங்கிலாந்து சிக்கியது.
42 ஆண்டுகளுக்கு பிறகு:
இங்கிலாந்து தொடரில் 28 விக்கெட்டுள்வீழ்த்தி 887 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார் அஸ்வின்.
ஜடேஜா இரு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கட்டுகெளை வீழ்த்தி 879 புள்ளிகளுடள் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதனால் 42 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி சார்பில் இரு இடங்களை தற்போது பிடித்துள்ளனர்.
1974ல் சுழற்பந்து வீச்சாளர்களான பிஷின்சிங்பேடி, பகவத் சந்திரசேகர் ஆகியோர் முதல் இரு இடங்களைப் பிடித்தனர்.
தோல்வியை சந்திக்காத கேப்டன்:
இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டன் ஆனதிலிருந்து வீரர்களை சரியாக வழி நடத்தி வெற்றிகளை தொடர்ந்து குவித்ததினால் நட்சத்திர கேப்டன்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் விராட்கோலி.
18 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைச் சந்திக்காத கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் விராட். இந்திய அணியை தோல்வியின்றி அதிக போட்டிகளை வழிநடத்திய முன்னாள் கேப்டன் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்துள்ளார் கோலி.
கவாஸ்கர் தலைமையில் 6 வெற்றிகள் தான். ஆனால் கோலி தலைமையில் 14 வெற்றிகள்; 4 போட்டிகளில் மட்டுமே டிரா. இந்த சாதனையால் தோனிக்கு நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஏன் என்றால் ஒரு நாள் போட்டிக்கும் கேப்டன் ஆகும் வாய்ப்பு கோலிக்கு கைகூடலாம்.
சாதனை படைக்கும் சென்னை மண்:
இந்திய வீரர்களை தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானம் தான் சாதனை படைப்பதற்கு உதவி வருகிறது.
2008ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியவீரர் சேவக் 319 ரன்களை எடுத்தது இங்கு தான். அதன் பிறகு தற்போது தனது முதல் சதத்தையே முச்சதமாக கருண் நாயர் பதிவு செய்ததும் இங்குதான்.
1985ம் ஆண்டு அடித்திருந்த 652 ரன்னை இந்திய வீரர்களே சென்னை மைதானத்தில் முறியடித்து 759 ரன் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
ஐடேஜா இரு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதல் முறை. வந்தாரை வாழ வைக்கும் சென்னை, கிரிக்கெட் வீரர்களை மட்டும் விட்டு வைக்குமா என்ன!
2016ம் ஆண்டின் சிறந்த வீரர்:-
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 2016ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும், சிறந்த டெஸ்ட் வீராகவும், இந்திய அணிக்காக விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டு ள்ளார். இந்த விருதைப் பெறும் 3வது இந்திய வீரர் அஸ்வின் ஆவார். இதற்கு முன்னதாக 2004ம் ஆண்டில் ராகுல் டிராவிடும், 2010ம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கரும் இதைப் பெற்றுள்ளனர்.
“இந்த வெற்றி தொடக்கம்தான். வரும் நாட்களில் ஏராளமான வெற்றிகளைக் குவிக்க இலக்கு நிர்ணையித்துள்ளோம். அதோடு ஒப்பிடுகையில் இந்த வெற்றி மிக சிறியது தான்.
எங்களின் வருங்காலத்திற்கான அடித்தளம் தான் இந்த வெற்றி” என கூறியுள்ளார் கேப்டன் விராட் கோலி.
2016ம் ஆண்டு இந்திய வீரர்களுக்கு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது என்றால் அது மிகை அல்ல. 2017ம்ஆண்டில் விராட் கோலியின் தலைமையிலான இந்த இளம் பட்டாளம் பல சாதனைகளை படைத்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.
Leave a Reply