• ‘சூப்பர் டா தம்பி’ : MI வீரரை பாராட்டிய CSK  கேப்டன் MS.Dhoni!

    ‘இளம்கன்று பயமறியாது’ என்று ஒரு பழமொழி உண்டு. இதை மெய்ப்பித்து இருக்கிறார் மும்பை வீரர் விக்னேஷ் புதூர்.   IPL தொடரில் முதல்முறையாக களம் இறங்கி இருக்கிறார் இந்த இளம் வீரர். கேரளாவை சேர்ந்த 24 வயதே ஆகும் இவரை மும்பை அணி (MI) ஏலம் எடுத்தது. 18 ஆவது IPL சீசனில் மூன்றாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன், MI அணி மோதியது. இதில் MI 155 ரன்களுக்கு ஆல் அவுட். இதை எளிதில்…

  • இஷான் கிஷன் ‘ருத்ரதாண்ட’ ஆட்டம்: நான் யார் என்று தெரிகிறதா?

    “நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்டே” என்ற பாடல் வரிக்கு ஏற்றால் போல் தான் இருந்தது இன்றைய IPL போட்டியில் இஷான் கிஷனின் சரவெடி ஆட்டம். மைதானத்தின்  நான்கு பக்கமும் பந்தை பறக்க விட்டு ஐபிஎல் வரலாற்றிலேயே தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார் இஷான் கிஷன். இன்றைய IPL போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில்  இஷான் கிஷனின் ருத்ரதாண்டவ ஆட்டத்தை  RR பந்து வீச்சாளர்களால்…

  • IPL 18 : அதிரடி சரவெடியாக IPL சீசனை தொடங்கி இருக்கும் RCB!

    IPL கிரிக்கெட் திருவிழா தொடங்கிவிட்டது. இனி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாலை நேர இளைப்பாறுதல் IPL தான். இந்த தொடரின் முதல் போட்டியே அதிரடியாகவும் சரவெடியாகவும் தொடங்கியுள்ளது. ஈடன் கார்டனில் நடந்த முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியும் மோதியது. முதலில் பேட் செய்த KKR வீரர் டி காக் 4 ரன்னிகளில் வெளியேற , அடுத்து வந்த சுனில் நரேன் – ரகானே ஜோடி அதிரடியாக ஆட்டத்தை…

  • ‘பயங்கரவாதி’

    14 ஆண்டுகள் ராமன் வனவாசம் சென்று கஷ்டப்பட்டதை  இதிகாசங்கள் கூறுகின்றன. கொண்டாடுகின்றன . ஆனால் எந்த ஒரு குற்றமும் செய்யாமல், – எதற்காக இப்படி வஞ்சிக்கப்படுகிறோம் என்பதைக்கூட அறிந்து கொள்வதற்கே  மொகமது ஆமிர் கானுக்கு 14 ஆண்டுகளாகி இருக்கிறது . இவர் எழுதியுள்ள தன்வரலாறு –  ‘பயங்கரவாதி என புனையப்பட்டேன்’ நூலை படிக்கிறபோது கற்பனை ராமனின் துயரத்தை விஞ்சி நிற்கிற ஆமீர் கான் கதை நம்மை உறைய வைக்கிறது . பழைய தில்லியில் ஆமிர் தனது அப்பா,…

  • கண்ணாடி மாளிகையில் அடைக்கப்பட்ட கூண்டுக் கிளிகள்….

    டிப் டாப் உடை அணிந்து நெடுந்துயர் ந்து கிடக்கும் கண்ணாடி மாளிகையில் நவீன கொத்தடிமைகளாக இருக்கும் IT  ஊழியர்கள் சந்திங்கும் நெருக்கடிகளையும், தனது உரிமைக்கான குரலை கூட எழுப்பமுடியாத இவர்களின் முனுமுனுப்பை ‘குரலற்றவர்கள்’ என்ற சிறுகதை தொகுப்பு மூலம் அவர்களின் குரல்களை ஒலிக்க செய்துள்ளார் ஹரிஷ் குணசேகர். இந்த சிறுகதை தொகுப்பு நூலில் இருக்கும் பத்து கதைகளுமே IT துறையில் பணியாற்றுபவர்களை பற்றியது. இவர்கள் சந்தித்துக் சிக்கல்களையும், இதனால் ஏற்படும்  மன உளைச்சலை பற்றியே நூலில் உள்ள…

  • அடிபட்ட சிங்கத்தின் கர்ஜனை….

    கொரோனா தாக்கம் இன்னும் முற்றாக முடிவடையாத போதும் சர்வதேச கிரிக்கெட் விளையாட இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றது. அங்கு இந்திய அணி வீரர்கள் 2 வாரம் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆஸ்திரேலிய தொடரில் 3 ஒருநாள், 3 டி20, 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடியது.  போட்டிகளை  நேரில் பார்ப்பதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் 50% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்தது.  ஆஸ்திரேலியா தொடரில் ODI,T20, போட்டியில் ரோகித் சர்மா இடம்பெறாதது இந்திய அணிக்கு பலவீனமாகவே…

  • பானிபூரி டூ இந்திய அணி

    19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. ஏற்கனவே 4 முறை கோப்பை வென்ற இந்திய அணி 5 ஆவது முறையாகக் கோப்பை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். சீனியர் அணி உலகக் கோப்பை வெல்ல முடியாத வருத்தத்திலிருந்த ரசிகர்களுக்கு ஜூனியர்களின் ஒவ்வொரு வெற்றியும் உற்சாகத்தை அளித்தது.ஒருபுறம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு வர மற்றொரு புறம் வங்கதேச அணி பலம் வாய்ந்த அணிகளைத் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு வந்தது. இறுதிபோட்டியில் முதலில் விளையாடிய இந்திய…

  • வாழும் மூதாதையர்கள்

    கருத்த முகம், பரட்டை தலை, கந்தல் துணி உடுத்திய ஒருவரைப் பார்த்தால் என்ன காட்டுவாசி மாதிரி இருக்கான் என நாம் சொல்வோம்.  ஏன் என்றால் மலைமக்கள் அல்லது பழங்குடி மனிதற்களை இப்படித்தான் சினிமாவும் நமது சமூக அமைப்பும் உருவகப் படுத்தியிருக்கிறது. இப்படி பழங்குடி மக்கள் பற்றிய தவறான கற்பிதங்களை உடைக்கவும், இளைய சமூகம் இவர்களை பற்றி அறிந்து கொள்ளும் விதமாக முவைவர் அ.பகத்சிங் எழுதிய ‘வாழும் மூதாதையர்’ நூலை உயிர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 36 வகையான…

  • நவம்பர் மாத விளையாட்டுகள் குறித்து ஒரு உலா….

    நவம்பர் மாத விளையாட்டுகள் குறித்து ஒரு உலா…. நவம்பர் மாதம் கிரிக்கெட், பேட்மிண்டன், தடகளம், துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் சில முக்கிய சாதனைகளை மட்டும் நாம் பார்ப்போம். சிங்கப் பெண்ணே… சீனாவில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இந்த தொடரில் 3 தங்கம் வென்று முதல் இடத்தை பிடித்தது இந்திய அணி.  17 வயதான இளம்  பெண் சிங்கம் மனு பக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில்…

  • சிங்கப் பெண்னே…

    ஒரு கனிக்காகக் காத்திருந்து அதைச் சாப்பிடுகையில் அதன் ருசியே தனி. அப்படி நீண்ட காத்தலுக்கு பிறகே பேட்மிட்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கக் கனியைப் புசித்திருக்கிறார் பி.வி.சிந்து. 2017, 2018ல் இறுதிப்போட்டி வரை வந்து தங்கம் வெல்ல முடியாமல் வெள்ளிப் பதக்கத்துடனே நாடு திரும்பினார். 2016 இருந்து பல்வேறு போட்டிகளில் 10 முறை இறுதிப்போட்டிக்குச் சென்றாலும், சிந்துவால் தங்கம் வெல்ல முடியவில்லை. பதக்கமே வெல்ல முடியாத நமக்கு ஏதோ ஒரு பதக்கம் கிட்டினால் மகிழ்ச்சிதானே.  ஆனாலும், இவரால்…