டிப் டாப் உடை அணிந்து நெடுந்துயர் ந்து கிடக்கும் கண்ணாடி மாளிகையில் நவீன கொத்தடிமைகளாக இருக்கும் IT ஊழியர்கள் சந்திங்கும் நெருக்கடிகளையும், தனது உரிமைக்கான குரலை கூட எழுப்பமுடியாத இவர்களின் முனுமுனுப்பை ‘குரலற்றவர்கள்’ என்ற சிறுகதை தொகுப்பு மூலம் அவர்களின் குரல்களை ஒலிக்க செய்துள்ளார் ஹரிஷ் குணசேகர்.
இந்த சிறுகதை தொகுப்பு நூலில் இருக்கும் பத்து கதைகளுமே IT துறையில் பணியாற்றுபவர்களை பற்றியது. இவர்கள் சந்தித்துக் சிக்கல்களையும், இதனால் ஏற்படும் மன உளைச்சலை பற்றியே நூலில் உள்ள சிறுகதைகள் பேசுகின்றன.
IT துறையில் என்னதான் சம்பளம் லட்சத்திற்கு மேல் வாங்கினாலும் இவர்கள் எல்லோரும் கூண்டில் அடைபட்ட கிளிகள். ஏன் என்றால் தன் உழைப்பு சுரண்டப்படுவது தெரிந்தாலும்,மௌனத்தை மட்டுமே இவர்களின் ஆயுதம் கருக்கும். உடல் அசைவிற்கு கூட தங்களின் எதிர்ப்பை காட்டமாட்டார். அப்படி காட்டினால் வேலை என்பது இவர்களுக்கு கேள்விக்குறியாகிவிடும். அதனால்தான் ஹரிஷ் குணசேகரன் சிறுகதை தொகுப்பிற்கு ‘குரலற்றவர்கள்’ என தலைப்பு வைத்துள்ளார் போல்.
கொரோனா ஊரடங்கின் போது பாரபட்சம் பார்க்காமல் அவர்களின் உழைப்பை எல்லாம் உறிஞ்சிவிட்டு அவர்களை கசக்கி குப்பைத் தொட்டியில் எறிந்ததை பற்றியும், work from homeல் இன்னும் அவர்களின் உழைப்பு உறிஞ்சப்படுவதை பற்றியும் குரலற்றவர்கள் கதைகள் பேசுகிறது.
வணிக மயமாகி போயிருக்கும் திருமணத்தை பயன்படுத்தி மேட்ரிமோனிகள் எப்படி தங்களின் பாக்கெட்டுகளை நிரப்பி லாபம் ஈட்டுகிறது என்பதை மகிழ் மேட்ரிமோனி கதை மூலம் மென்பொருள் துறை வேலை செய்யும் இளைஞனின் பெண் தேடல் படம் மூலம் உணர்த்துகிறார் ஹரிஷ்.
உள்ளூரில் இருந்து வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் எல்லோரும் அங்கு படித்துக்கொண்டே, அங்கிருக்கும் சுற்றுலா தளங்களில் உலாவிக் உலாவிக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பார்கள் என நம் பொதுப்புத்தியில் ஒரு சிந்தனை உண்டு. இந்த சிந்தனையை தொலைந்து போனவன் என்ற கதையில் உடைத்தெறிந்து இருக்கிறார் ஹரிஷ் குணசேகரன் குணசேகரன்.
வெளிநாடுகளில் படிக்க செல்லும் இளைஞர்கள் பலரும் தங்குவதற்கு கூட இடமில்லாமல் கிடைக்கும் இடங்களிலெல்லாம் தங்கி தங்களின் படைப்புகளை முடிக்கவே எவ்வளவு ஒரு நீண்ட போராட்டத்தை நடத்துகிறார்கள் என்பதை இந்த சிறுகதை நமக்கு கூறுகிறது.
பிராஜெக்ட் கிடைக்காமல் பெஞ்சில் உட்காரும் மன ஓட்டத்தை இருண்மை வைத்ததையும், உடைப்பிற்கு அல்லது படிப்பிற்கும் படிப்பிற்கும் சம்பளம் கிடைக்காமல் வேலை பார்த்து வருபவர்களின் குரல்களாக பேசுகிறது சம்பளம் கதை. இப்படி இந்த சிறுகதை முழுக்க மென்பொருள் துறையின் கோரமுகத்தை வெளிப்படுத்தியுள்ளது .
Leave a Reply