கால்பந்து விளையாட்டில் நட்சத்திர அணியாக இருந்தாலும், அணியில் கூட்டு முயற்சி இல்லை என்றால் என்ன நடக்கும் என்பதை இந்த உலகக் கோப்பை உணர்த்தியிருக்கிறது.
பரபரப்பான ஆட்டங்களுடனும், சர்ச்சைகளுடனும், வரலாற்றுச் சாதனைகளுடனும் 21வது உலகக் கோப்பை முடிவடைந்துள்ளது.
அர்ஜென்டினா, பிரேசில், ஜெர்மனி போன்ற நட்சத்திர அணிகள் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த நட்சத்திரங்கள் மேகங்களில் மறைந்துவிட்டன.
முதல் போட்டியிலிருந்த ஆரவாரம் போட்டி முடிந்தும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஏன் என்றால் 20 ஆண்டுகளுக்குப்பின்னர் பல சாதனைகள் நிகழ்ந்துள்ளதுதான் இதற்குக் காரணம்.
மாஸ்கோவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிரான்ஸ் – குரோஷியா அணிகள் மோதின. பிரான்சுடனான அனைத்துப் போட்டிகளிலும் குரோஷியாவிற்கு தோல்வியடைந்துள்ளதால் பிரான்ஸ்தான் கோப்பை வெல்லும் எனக் கால்பந்து வல்லுநர்கள் கூறினர். ரசிகர்களுக்கும் இது தெரியும்.
கால்பந்தில் வெற்றியின் அருகே சென்ற அணிகள் கூட திடீர் எனத் தோல்வியடைந்துள்ளது. இந்த உலக கோப்பைப் போட்டியில் கூட பெல்ஜியம் – ஜப்பான் ஆட்டத்தில் ஜப்பான் 2 கோல்அடித்து வெற்றியின் பக்கம் இருந்தது. ஆனால் பெல்ஜியம் கடைசி நிமிடங்களில் கோல்கள் அடித்து ஆட்டத்தையே மாற்றினர். எந்த நொடியில் வேண்டுமானாலும் ஆட்டம் திசை மாறும். அதனால் தான் கால்பந்திற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். அப்படி ஏதாவது ஒரு நொடியில் குரோஷியாவின் ‘மேஜிக்’ நடந்து விடாதா என பல கோடி மனங்கள் ஏங்கியதால் பிரான்ஸ் கோப்பைக்கு முத்தமிட்டாலும், ரசிகர்களோ குரோஷியாவிற்கு அன்பு மழை பொழிந்தனர்.
இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணி 4 கோல் அடித்தது. அதில் இரண்டு கோல் குரோஷியாவின் தவறால் கிடைத்தது. பிரான்ஸ் ஆட்டத்தைக் காட்டிலும் குரோஷியாவின் ஆட்டம் சிறப்பாகவே இருந்ததால் தான் இரண்டு கோல் அடித்தனர். உலகக் கோப்பையில் இரண்டாவது இடம் பிடித்து சிறிய நாடுகளுக்கான புதிய விடியலை குரோஷியாவிற்கு ஏற்படுத்தியுள்ளது.
1998ல் பிரேசிலை 3-0 என்று வீழ்த்தி பிரான்ஸ் முதல்முறையாகக் கோப்பையை வென்றது. பிறகு 20 ஆண்டுகள் காத்திருந்து ரஷ்யாவில் இரண்டாவதாகக் கோப்பையை வென்று 60 மில்லியன் பிரான்ஸ் மக்களின் கனவை நிறைவேற்றியுள்ளனர்.
போட்டியின் இறுதியில் பெய்த மழை பிரான்சை மட்டும் வாழ்த்தவில்லை. குரேசியாவையும் சேர்த்தே வாழ்த்தியது. அதனால் தான் போட்டி முடிந்த பின் மழை பெய்தது.
ஜெர்மனியும் 1954ல் முதல் முறையாகவும், 1974ல் இரண்டாவது முறையாகவும் கோப்பையை வென்றுள்ளனர். அதேபோல் உருகுவே 1930லும் 1950களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
பிரான்ஸ் அணியின் 20 வருடப் பயணத்தில் தன் உடலையே கால்பந்திற்காக கொடுத்திருக்கிறார் அதன் பயிற்சியாளர். 1998ல் முதல் கோப்பை வெல்லும் போது அணியின் கேப்டன். இம்முறையோ அதன் பயிற்சியாளராக கோப்பையை வென்று ‘கால்பந்தின் வற்றாத ஜீவநதி’ என நிறுபித்துக் காட்டியிருக்கிறார்.
பிரேசிலின் மரியோ ஜகாலொவும், ஜெர்மனியின் பெக்கன்பேவரும் வீரர்கள், பயிற்சியாளராக இருந்து கோப்பையை வென்றிருக்கிறார்கள்.
கால்பந்து வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கும் புதிய வரலாறுகள், சாதனைகள் நிகழ்த்து கொண்டே இருக்கின்றன.
1970ல் மெக்சிகோவில் நடந்த இறுதிப்போட்டியில் பிரேசில் 4 கோல் அடித்து இத்தாலியை வீழ்த்தியது. பிறகு 48 ஆண்டுகள் கழித்து பிரான்ஸ் 4 கோல் அடித்துள்ளது. இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பையில் எதிரணியினர் அதிகபட்சம் அடித்தது 2 கோல் தான்.
1996ல் இங்கிலாந்து முதல் முறையாகக் கோப்பை வென்றது. அதன் பிறகு தொடர் சரிவுகளை சந்தித்து ரசிகர்களின் கண்களுக்கே தெரியாமல் மறைந்துவிட்டது. பிறகு ரஷ்யாவில் தான் ‘பீனிக்ஸ்’ பறவையாக மீண்டெழுந்துள்ளது. போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் கண்களில் நாங்களும் இருக்கிறோம் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் இங்கிலாந்து வீரர்கள். இந்நாட்டின் வீரர் ஹாரி கேன் 6 கோல் அடித்துத் தங்க காலுரையை தட்டிச் சென்றுள்ளார்.
20 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து அணியை அரையிறுதிக்குக் கொண்டு சென்றதற்காக லண்டன் போக்குவரத்துத் துறை, லண்டன் டியூப் ஸ்டேஷனுக்கு ‘கரேத் சவுத்கேட்’ என தற்காலிகமாக பெயர் சூட்டி பெருமை சேர்த்துள்ளது.
மெஸ்சி, ரொனால்டோ, நெய்மர் இவர்களின் ஆதிக்கம் இருந்தாலும் இறுதியில் எம்பாப்பே, லூகா மோட்ரிச் , ஹாரிகேன், ஆன்டோனி கிரீஸ்மேன் பெயர்களே உலகம் முழுவதும் ஒலித்தது.
குரோஷியாவிற்கு அணியைச் சிறப்பாக வழிநடத்தி, அனைத்தையும் புன்னகையால் கடந்து சிறந்த வீரருக்கான தங்க பந்து விருதைப் பெற்றுள்ளார் லூகா மோட்ரிச். போரினால் அகதியாக தன் வாழ்க்கையை துவங்கிய இவர், கால்பந்தினால் உலகையே தன்வசப்படுத்தியிருக்கிறார் .
‘என்னை தாண்டி கோல் அடிடா பாப்போம்’ என சொல்லாமல் எதிரணிக்கு சவால் விட்டவர் பெல்ஜியம் வீரர் திபாட் கோர்ட்வா. காலிறுதிபோட்டியில் பிரேசில் அணிக்கே தண்ணி காட்டியவர். நெய்மரின் அதனை வியூகங்களையும் உடைத்தெறிந்து பெல்ஜியம் வெற்றிக்குப் பக்க பலமாக இருந்தவர்.
பிரான்ஸ் அர்ஜன்டினாவுடன் 4 கோல் அடித்தது. ஆனால் பெல்ஜியத்திடம் அவர்களால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. 27 கோல்களை தடுத்து அணியின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்துள்ளார். அதனால் தான் திபாட் கோர்ட்வாக்கு தங்க கையுறை விருது கிடைத்துள்ளது.
கால்பந்தின் கடவுள் பிலேவிற்கு அடுத்து இறுதிப்போட்டியில் 18 வயதில் கோல் அடித்த வீரர் என்றால் அது எம்பாப்பே தான்.
1998ல் பிரான்ஸ் உலக கோப்பை வென்றபோது பாரிசில் பிறந்தவர் தான் கிலியன் எம்பாப்பே. சிறுவயதில் வருமை, நிறவெறி காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டார். இவரின் தந்தை கால்பந்து வீரர் என்பதால், எம்பாப்பேவிற்கும் கால்பந்து மீது காதல் வந்துள்ளது.
‘ஷீ’ வாங்கக் கூட காசுஇல்லாமல் பள்ளி அணியில் வெற்று கால்களுடன் விளையாடிய இந்த ‘கால்’ தான் இறுதிப்போட்டியில் கோல் அடித்த 2வது இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளது.
“எம்பாப்பே இதே போல என் சாதனைகளை தொடர்ந்து சமன் செய்து கொண்டே இருந்தால், நான் என் பூட்சை தூசுத்தட்ட வேண்டியிருக்கும்” என பீலே கூறியிருக்கிறார்.
கால்பந்து எம்பாப்பேவை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது…
Leave a Reply