‘இளம்கன்று பயமறியாது’ என்று ஒரு பழமொழி உண்டு. இதை மெய்ப்பித்து இருக்கிறார் மும்பை வீரர் விக்னேஷ் புதூர். IPL தொடரில் முதல்முறையாக களம் இறங்கி இருக்கிறார் இந்த இளம் வீரர்.
கேரளாவை சேர்ந்த 24 வயதே ஆகும் இவரை மும்பை அணி (MI) ஏலம் எடுத்தது. 18 ஆவது IPL சீசனில் மூன்றாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன், MI அணி மோதியது. இதில் MI 155 ரன்களுக்கு ஆல் அவுட்.
இதை எளிதில் சேசிங் செய்துவிடலாம் என களம் இறங்கிய CSK அணிக்கு, களம் ஒன்றும் அப்படி இல்லை என்பதை விக்னேஷ் புதூர் வீசிய ஓவர் உணர்த்தியது. அரை சதம் அடித்து சிறப்பாக விளையாடி கொண்டிருந்தபோது விக்னேஷ் புதூர் வீசிய முதல் ஓவரில் சிக்ஸ் அடிக்க பார்த்தார் ருத்ராஜ் கெய்க்வாட். ஆனால் அது கேட் ஆனது.
இந்த விக்கெட் எடுத்தை அடுத்து ‘யார்ரா இந்த பையன்?’ என கேட்க செய்து இந்த ஐபிஎல் தொடரில் தனது பெயரை பதிவு செய்து இருக்கிறார் இந்த இளம் வீரர் விக்னேஷ் புதூர்.
பின்னர் அடுத்த ஓவரில் சிவம் துபே, அதற்கு அடுத்த ஒரு தீபக் ஷிடா என வீசிய மூன்று ஓவர்களிலும் 3 விக்கெட் எடுத்து CSK அணிக்கு பீதியை ஏற்படுத்தினார்.
அதனால் தான் ரச்சின் ரவீந்திரன் நிதானத்துடன் விளையாடி CSK அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
விக்னேஷ் புதூர் வீசிய 18 வது ஓவரில் ரச்சின் ரவீந்திரா 2 சிக்ஸர் அடிக்கவில்லை என்றால் CSK அணியின் வெற்றி கொஞ்சம் கடினமாக தான் இருந்திருக்கும். வெற்றி பெற்ற பிறகு மைதானத்தில் விக்னேஷ் புதூர் பந்து வீச்சு பற்றி தோனியிடம், ரச்சின் ரவீந்திரா சொல்லி இருப்பார்.
அதனால்தான் போட்டிக்கு பிறகு வீரர்களுக்கு கைகொடுக்கும் போது விக்னேஷ் புதூர் தோளில் தட்டி தோனி பாராட்டினார். இந்தப் பாராட்டை இந்த லிட்டில் பாய் நிச்சயம் மறக்க மாட்டான்.
முதல் போட்டியிலேயே தனது முத்திரை பதித்ததை அடுத்து MI அணியில் தனது இடத்தை உறுதி செய்து விட்டார் விக்னேஷ் புதூர்.

Leave a Reply