துப்பாக்கி சுடுதலின் ‘தனி ஒருவன்’

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க அந்த சிறுவனுக்கு ஒரு சிறிய தடை இருந்தது. அது பள்ளித் தேர்வு . விளையாட்டா?, தேர்வா? எது என்று முடிவு செய்யும் கட்டத்தில் சிறுவன் இருந்தான். புத்தகத்தையும் பேனாவையும் விட அதிகம் துப்பாக்கியை நேசித்தவன் தேர்வறைக்கா செல்வான். பேனாவிற்கு பதில் துப்பாக்கியைக் கையில் ஏந்தி தில்லியை நோக்கிச் சென்றான். 

10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் தன் இலக்கை குறி வைத்துச் சுட்டான். அது உலக சாதனையானது. அந்தச் சிறுவன் வேறு யாரும் கிடையாது 16 வயது உடைய  இளம் காளை சவுரவ் சவுத்ரி.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில் 61 நாடுகளைச் சேர்ந்த 500 வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் சவுத்ரி உட்பட பல வீரர்கள் கலந்து கொண்டனர். 

10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவின் இறுதிப் போட்டியில் சவுத்ரியுடன் சேர்த்து 8 வீரர்கள் பங்கேற்றனர். அவர்களில் செர்பிய வீரர் டாமிர் மிகெக், சீன வீரர் வெய்பாங் ஆகியோர் ஒலிம்பிக் , ஆசிய, உலகப்  போட்டிகளின் ஜாம்பவான்கள். பல வெற்றிகளை கண்டவர்கள். இவர்களுக்கு சவுத்ரியின் வயதை விட அனுபவம் அதிகம். ஆனால் இவர்களைக் கண்டு சவுதிரி அஞ்சவில்லை. சீனியர்களுடன் கலந்து கொள்ளும் முதல் உலகப் போட்டியாக இருந்தாலும் கடின உழைப்பால் யாரையும் எளிதில் வெற்றி பெற முடியும் என்பதை தனது சாதனை மூலம் உலகிற்கு சொல்லியிருக்கிறார் இவர்.

உக்ரைன் வீரர் ஒமெல்சக் ஒலெ எடுத்திருந்த 243.6 ஐ விட கூடுதலாக 245 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படைத்திருக்கிறார் சவுத்ரி.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் கலினா கிராமத்தின் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர்தான் சவுரவ் சவுத்ரி. கிராமத்தில் உள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். வாழ்வியல் வயதில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டு மீது ஆர்வம் இருந்தாலும் கடந்த 3 ஆண்டுகள்தான் அவரை உலகிற்கு அறிமுகப் படுத்தியது. இந்த குறுகிய காலத்திலேயே பல்வேறு பதக்கங்களைத் தன்வயப் படுத்தியிருக்கிறார். சவுத்ரியின் சாதனைக்கு அமித் ஷெரான் அகாடமி தூணாக இருந்துள்ளது.

துப்பாக்கி சுடுதல் போட்டி மற்ற விளையாட்டைக் காட்டிலும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். இதில் மனதை ஒருநிலைப் படுத்துவதில் கை தேர்ந்தவராக இருக்க வேண்டும். அப்போது தான் அருகே பெரிய சத்தம் கேட்டாலும் கவனம் சிதறாமல் இலக்கை நோக்கிச் சுட முடியும். 

கிரிக்கெட்டில் ஒரு பந்தை ‘டொக்’ செய்தாலும், அடுத்த பந்தில் ‘சிக்ஸ்’ அடிக்கலாம். ஆனால், துப்பாக்கி சுடுதல் அப்படியல்ல. இங்கு கவனம் கொஞ்சம் சிதரினாலும் பதக்கத்தைப் பறிகொடுக்க நேரிடும்.

‘நான் தங்கம் வெல்வேன், உலக சாதனை படைப்பேன், ஒலிம்பிக் போட்டிக்கான ஒதுக்கீட்டை உறுதிசெய்வேன் என எதைப் பற்றியும் நினைக்க வில்லை. இதைப் பற்றி நினைத்திருந்தால் நான் வெற்றி பெற்றிருக்க முடியாது. என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று மட்டுமே நினைத்திருந்தேன்.’ எனக் கூறி சாதனையை எளிமையாக கடந்து செல்கிறான்  சவுத்ரி. விளையாட்டின் போது, மன ஒட்டத்தில் எதையும் நினைக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் இவர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆசிய விளையாட்டிற்கான தேர்வு போட்டியில் சவுத்ரி 248.2 புள்ளிகள் பெற்றார். இது உக்ரைன் வீரர் ஒலெக் ஓமுல்க் பெற்ற 243.6ஐ விட அதிகம். ஆனால் தேர்வு போட்டி என்பதால் சவுத்ரி எடுத்த புள்ளிகளை நடுவர்கள் சாதனையாக ஏற்றுக் கொள்ளவில்லை.  தற்போதோ உலக போட்டியில் 245 புள்ளிகள் பெற்று அந்தச் சாதனையை முறியடித்திருக்கிறார். 

“சவுத்ரிக்கு 245, 248 புள்ளிகள் பெறுவது பெரிது அல்ல. அவன் இலக்கு 590க்கு மேல். இதற்காக அவன் கடும் முயற்சி செய்கிறான்”. என்கிறார் பயிற்சியாளர் ஹோரான்.

கடந்த ஆண்டு சாங்வோனில் நடந்த ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் சவுத்ரி உலக சாதனை படைத்தார். தற்போது சீனியர் பிரிவிலும் உலக சாதனைப் படைத்து, ஜூனியர், சீனியர் இரண்டிலும் தங்கத்தை வேட்டையா டியிருக்கிறார்.

இளையோர் ஒலிம்பிக், ஜூனியர் ளைளக உலக சாம்பியன் ஷிப், ளைளக உலகக் கோப்பை, ஏர்குன் சாம்பியன்ஷிப், ஆகிய போட்டி என எல்லா போட்டிகளிலும் தங்கம் வென்றுள்ளார் இந்த தங்க மகன். 

இதே தொடரில் இரட்டையர் பிரிவில் மனுபாகருடன் இணைந்த சவுரப் சவுத்ரி 483.4 புள்ளிகள் பெற்று தங்கம்  வென்றது குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ ஒலிம்பிக்கிலும் சவுரப் சவுத்ரியின் தங்க வேட்டை தொடரட்டும்…


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *