இந்தியாவின் ரோகித் என்ற புயல்!

கிரிக்கெட்டில் ரோகித்தின் ஆரம்பநாட்கள் கசப்பானவை. ஏன், என்றால், ரோகித் சர்மா மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை கிடையாது. அவர் மீது ஈர்ப்பும் இல்லை. இவர் மட்டையைப் பிடித்து களத்தில் விளையாட வந்தால் “ஏன் இவரை இறக்குகிறார்கள்?” என ரசிகர்கள் ஆவேசப்படுவார்கள். அந்த அளவு ரோகித் மீது ரசிகர்களுக்குப் பாசம் அதிகம். இதற்குக் காரணம், ரோகித் பேட்டிங் செய்யும் போது சக வீரர்களைப் பல முறை ‘ரன் அவுட்’ செய்திருக்கிறார். இதனால் தான் ரோகித் சர்மாவை ரசிகர்களுக்குப் பிடிக்காது. ஆனால் இந்தக் கரும்புள்ளிகள் ஒவ்வொன்றையும் பந்தாடி, ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறார் இந்த ‘ரன் அவுட்’ நாயகன். 

229 ரன் தான் ஒருநாள் போட்டியில் அதிக பட்ச ரன்னாக இருந்தது. இதை 1997ம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் பெலிண்டா கிளார்க் அடித்தார். இந்த ரன்னை நட்சத்திர வீரர்கள் அடிக்கவில்லை. 2014ம் ஆண்டு 264 ரன்களை எடுத்து வரலாற்று சாதனை படைத்தார் ரோகித். 

முதலில் பேட்டிங் மீது ரோகித்துக்கு காதல் இல்லை. பந்துவீச்சாளராகவே தன்னை முன்னிலைப் படுத்தினார். பிறகு ஒரு போட்டியில் ரோகித் பேட்டிங் விளையாடுவதைப் பார்த்த பயிற்சியாளர் அவரை முழு நேரப் பேட்டி பயிற்சியில் ஈடுபடுத்தினார். 

இந்திய அணியில் ஆரம்ப நாட்களில் 6,8வது வீரராகக் களம் இறங்கினார். பின்னர் படிப்படியாக ஏணிப்படிகளில் ஒவ்வொன்றாக இறங்கி முதல் ஆட்டக்காராக விளையாடி வருகிறார். சச்சின், சேவாக், கம்பீர் போன்ற வீரர்களுடன் முதல் ஆட்டக்காரராக விளையாடிப் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். அவர்கள் சாதனைகளிலும் பங்கேற்றிருக்கிறார் இவர். 

2007ம் ஆண்டு சர்வதேசப் போட்டியில் முதல் முறையாக அயர்லாந்துடன் விளையாடினார். இதில் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை. அதே ஆண்டு தென் ஆப்பிரிக்காவுடன் நடைபெற்ற போட்டியில் கடைசி ஆட்டக்காரராக இறங்கி 50 ரன்களை எடுத்தபோதுதான் ரசிகர்கள் பார்வை இவர் மீது கொஞ்சம் விழுந்தது. 

2010ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்கிறார். அதே ஆண்டு இலங்கையுடன் ஒரு போட்டியில் சதம் அடித்து இந்திய அணியில் முக்கிய வீரர்கள் பட்டியலில் தன்னையும் சேர்த்துக் கொண்டார். 

2013ம் ஆண்டு, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நவம்பர் மாதம் 2ந்தேதி பெங்ளூரில் நடைபெற்ற போட்டியில் 158 பந்துகளில் 209 ரன்கள் எடுத்து அனைவரையும் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இந்தப் போட்டியில் 200 ரன்களை கடக்கும்போது சேவாக்கின் சாதனையை இவர் முறியடித்துவிடுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் கிளின்ட் மெக்கே வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார். ‘பந்துகளை ரன் அடிக்காமல் வீணாக்கும்’ ரோகித் இப்படி புயலாக விளையாடுவார் என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். 

ரோகித் என்ற புயல், 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற இலங்கையுடனான போட்டியில் அந்நாட்டு வீரர்களின் பந்துகளை ஒவ்வொன்றையும் பறக்கவிட்டு, 1997ம் ஆண்டு இருந்த அதிகபட்ச ரன் 229தை தாண்டி 264 ரன் எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்தார். 

இந்தச் சாதனை படைக்கும்போது காயம் காரணமாக ரோகித் மூன்று வாரங்கள் ஓய்வில் இருந்தார். இவர் ஓய்வில் இருந்த போது ரகானே, முதல் நிலை வீரராக சிறப்பாக விளையாடினார். இதனால் ரோகித்திற்கு முதலில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஓய்விற்குப் பிறகு விளையாடி ரோகித் கொல்கத்தா மைதானத்தை தன்வசப்படுத்திக் கொண்டு வரலாற்றுச் சாதனையை படைத்து இந்திய அணியில் (ஓய்வு பெறும் வரை) தானே முதல் நிலை வீரர் என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டார். 

ரோகித், சேவாக், தோனி போல் அதிரடி ஆட்டக்காரர் கிடையாது. போட்டியின் ஆரம்பத்தில் மெதுவாகத்தான் ஆடுவார், பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இவர் விளையாடிய அனைத்துப்போட்டிகளையும் நாம் பார்த்தால் இது நமக்குத் தெளிவாக தெரியும். 

டிசம்பர் மாதம் இலங்கையுடன் இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள் தொடர், டி.20 விளையாடியது. இதில் டெஸ்ட் போட்டிகளில் கோலி கேப்டனாக செயல்பட்டார். கோலி திருமணத்திற்கு சென்றதால் ஒருநாள், டி.20 போட்டிகளில் ரோகித் கேப்டனாக செயல்பட்டு தொடரைக் கைப்பற்றினார். 

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. பிறகு நடைபெற்ற 2வது போட்டியில் ரோகித்தின் ருத்திர தாண்டவ ஆட்டத்தை இலங்கை பந்து வீச்சாளர்கள் தடுக்கமுடியாமல் முடியாமல் திணறினார்கள். இதில் அவர் 208 ரன்களை எடுத்து மூன்று முறை இரட்டைச் சதம் அடித்த ஒரு வீரர் என்ற சாதனையை படைத்தார். 

இந்த மகிழ்ச்சியிலிருந்து ரசிகர்கள் மீண்டு வருவதற்குள் டி.20 போட்டியில் 35 பந்தில் 118 ரன்கனை எடுத்து, தென்னாப்பிரிக்கவீரர் டேவிட் மில்லரின் சாதனையை ரோகித் சமன் செய்தார். இந்த போட்டியில் 10 சிக்சர்கள் அடித்ததன் மூலம் ஒரு போட்டியில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார். 

2017ம் ஆண்டு மூன்று வடிவிலான போட்டிகளையும் சேர்த்து 64 சிக்சர்கள் அடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச சிக்கசர் என்பது குறிப்பிடத் தக்கது. சச்சின் டெண்டுல்கர் ஒரே போட்டியில் 25 பவுண்டரி அடித்தது தான் சாதனையாக இருந்தது. ரோகித் சர்மா 33 பவுண்டரிகள் அடித்து சச்சின் சாதனையை முறியடித்துள்ளார். இப்படி ரோகித் சர்மா பல சாதனைகளை அமைதியாகவே படைத்திருக்கிறார். 

இந்திய அணியில் தற்போது முதலில் களம் இறங்கி விளையாடுவதற்கு நிறைய வீரர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் சொதப்பினாலும் வேறு வீரர் அந்த இடத்திற்கு வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இதை நன்கு உனர்ந்த வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதை நாம் பார்க்க முடிகிறது. பத்து வீச்சாளர்களை அச்சுறுத்தும் வீரராகியிருக்கிறார் ரோகித் சர்மா.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *